வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு
வயல் நிலங்களில் களை நெல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நாடளாவிய களை நெல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நமது வவுனியா மாவட்டத்தில் 27.06.2025, வெள்ளிக்கிழமையன்று விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று மடுக்கந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விவசாயிகள் நேரடியாக வயல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு களை நெல்லினை இனங்காண்பது, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலங்களில் களை நெல்லின் பரவலைத் தடுப்பது தொடர்பான விளக்கங்கள், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் […]
