விவசாய அமைச்சு

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப்பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத் …

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி …

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும் Read More »

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும்

வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலிற்கமைய வடமாகாண ஆளுநர் செயலக அலுவலர்கள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, வட்டக்கச்சி, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கு 20.07.2019 ஆம் திகதி களவிஜயமும் கல்விச் சுற்றுலாவினையும் மேற்கொண்டிருந்தார்கள். இக் களவிஜயத்தில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலளர், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் என …

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும் Read More »

தேசிய போதையற்ற வாரம் தொடர்பிலான கலந்தரையாடல்

தேசிய போதையற்ற வாரத்தினை முன்னிட்டு ”போதையற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கடந்த 25.06.2019 ஆம் திகதியன்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டாக்டர். சி.வசீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Please follow and like us:0

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

மாவட்ட மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் 31.05.2019 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இக் கௌரவிப்பு நிகழ்வானது உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம் …

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் 14.05.2019 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக …

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் வயல்விழாவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 23.05.2019 ஆம் திகதி  ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கால்நடை உற்பத்தி …

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019

“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக …

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019 Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் 11.05.2019 ஆம் திகதி சனிக் கிழமை உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் …

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை

யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 10.04.2019 (புதன்கிழமை) அன்று காலை 7.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களின் ஆதரவுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது. இப் பயிர்ச் சிகிச்சை முகாமில் நோய் …

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை Read More »