புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் யாழ்ப்பாணம்
திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பல்வேறு புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா 09.04.2019ம் திகதி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மாகாண நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் பி.முகுந்தன், மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சாந்தசீலன் அவர்களும், மாகாண விவசாயத் திணைக்கள […]