மகளிர் விவகார அமைச்சு

மாகாண புடவைக் கைத்தொழில் போட்டி 2021

உள்ளூர் நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புடவைக் கைத்தொழில் திணைக்களத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டியானது சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டு நவம்பர் மாதம் 06ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது. வடமாகாண ரீதியாக மொத்தமாக 216 கைத்தறி நெசவு ஆக்கங்கள் போட்டிக்கு நெசவாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. […]

மாகாண புடவைக் கைத்தொழில் போட்டி 2021 Read More »

‘சில்ப அபிமானி’ – மாகாண கைப்பணிப் போட்டி 2021

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டி சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டும் ஓக்ரோபர் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர், பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது. வடமாகாண ரீதியில் 1700 கைப்பணி ஆக்கங்கள் கைப்பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.

‘சில்ப அபிமானி’ – மாகாண கைப்பணிப் போட்டி 2021 Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் பயனாளிகளான மாற்று வலுவுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலந்துரையாடல் இரண்டாம் கட்டமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட  அலுவலக உத்தியோகத்தர்களுக்கு 24.11.2021 தொடக்கம் 26.11.2021 வரை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் (26.11.2021) பிரதம

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் பயனாளிகளான மாற்று வலுவுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலந்துரையாடல் முதலாம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் தலைமை அலுவலக உத்தியோகத்தர்களுக்கு 15.11.2021 தொடக்கம் 17.11.2021 வரை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் (17.11.2021) பிரதம செயலாளர், வட

தொழிற்துறை திணைக்களத்தினால் வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

தொழிற்துறைத்திணைக்களத்தில் திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்று 08/09/2020 திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இப் பயிற்சிக்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக திணைக்களத்தின் கைத்தொழில் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ப.ராகவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

சர்வதேச மகளிர் தினம் – 2020

வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினமானது இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம், கிளிநொச்சி, தப்ரபேன் Sea Food (Pvt Ltd), மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப் பொருளில் 2020.03.10 அன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை

சர்வதேச மகளிர் தினம் – 2020 Read More »

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு

வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பு  தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சி கடந்த 31.10.2019 காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது வட மாகண ஆளுநரின் செயலாளர் திரு.S. சத்தியசீலன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான  மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Mr. Tan Yang Thai மலேசிய இலங்கை வர்த்தக சபைத் தலைவர் Dato. S.குலசேகரன், மகளிர் விவகார

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு Read More »

சர்வதேச முதியோர் வார விழா -2019

சர்வதேச முதியோர் வார விழாவானது ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தில்; 01.10.2019 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 07.10.2019 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து 07நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது அரச முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் முதியோர் அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கைதடி அரச முதியோர் இல்ல மூத்தோருக்கான விளையாட்டுப்போட்டி, சமூகத்தில் மூத்தோருக்கு சேவையாற்றுவோர் மற்றும் முதியோருக்கு சேவையாற்றும் நிறுவனங்களை கௌரவித்தல்

சர்வதேச முதியோர் வார விழா -2019 Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் குருநகர் மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு சிரட்டைசார் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும் ‘குருநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்’, குருநகர் மேற்கு அவர்களுக்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.99,111.50 பெறுமதியான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அமைச்சு அலுவலகத்தில் 2019/09/24 ஆம் திகதி சங்க உறுப்பினர்களிடம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தும்பளை மேற்கு மற்றும் வல்லிபுரம், புலோலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பனைசார் பொருட்களின் உற்பத்தி மற்றும் பலகார வகைகளைச் செய்யும் ‘திருமால் மகளிர் செயற்பாட்டுக்குழு’, வல்லிபுரம், புலோலி அவர்களுக்கு ரூபா.178,591.50 பெறுமதியான இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் செய்யும் ‘அபிராமி சமூகமட்ட மகளிர் அமைப்பு’, தும்பளை மேற்கு, பருத்தித்துறை அவர்களுக்கு

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு Read More »