கிடைக்கின்ற உதவிகள் – நிவாரணங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வாழ்க்கையை நிலைபேறானதாக மாற்றியமைக்க வேண்டும். – ஆளுநர்
வாழ்வாதார மேம்பாட்டுக்காகத்தான் உதவிகள் – நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கிடைக்கின்ற உதவிகள் – நிவாரணங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நிலைபேறாணதாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (13.02.2025) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிராமிய […]
