வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.03.2025 அன்று செவ்வாய்க் கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் […]
