2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் !!
2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் 01.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் எமது மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தை […]
