எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு
பிள்ளைகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் வழங்குவது சிறப்பானது. அதுவும் என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கி பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றமை உண்மையில் பாராட்டப்படவேண்டியதே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி நிலையத்தில் 20.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் […]
