வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்
வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களை விரைந்து திணைக்களங்கள் தயாரிக்கவேண்டும் எனவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆகியனவற்றின் […]
