ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19/06/2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்  நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும், யாப்பாணத்திற்கான  இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தை […]

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது Read More »

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு (16/06/2024) நடைபெற்றது. இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் (16/06/2024) நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மடு தேவாலயத்திற்கு

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்  ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.    

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது Read More »

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்,  இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட்  நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம்

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல் Read More »

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (07/06/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள்,

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (05/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர்  செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு Read More »

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும்

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் இன்றைய (03/06/2024) தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாளை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும் Read More »

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று  (30/05/2024) மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய, அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். அனுமதிப்பத்திரம் இன்றி சில

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் Read More »

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து  வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »