அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடைவதேயாகும். – ஆளுநர்
கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் ஊடாக இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவது மாத்திரமல்ல இந்தப் பகுதியுமே அழகாக மாறவுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த இந்த அரசாங்கத்தையும் கௌரவ அமைச்சர் சந்திரசேகர் அவர்களையும் பாராட்டுகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கொழும்புத்துறை இறங்குதுறை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்புத்துறை இறங்குதுறையில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025) […]
