கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகவுள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு […]
