ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு […]

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (27.12.2024)

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு Read More »

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப் பாராட்டினார். வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின் மணிவிழாவும் சேவைநயப்பும் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் 27.12.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு Read More »

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர் Read More »

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

நெல் அறுவடைக்கு முன்னர் விலை நிர்ணயத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய விவசாய அமைப்புக்கள் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் வடக்கிலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆளுநர், அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி – 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாலன் பிறப்பை நாம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகையில் கிறிஸ்துமஸின் உண்மையான உணர்வை நினைவில் கொள்வோம். அன்பை – கருணையைப் பரப்புதல், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு இரங்குதல் – உதவி செய்தல் மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்தை வளர்ப்பது என்ற எண்ணங்களை மனதிலிருத்துவோம். இந்த மகிழ்ச்சியான பண்டிகையை நாம் கொண்டாடும்போது, எம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நம் இதயங்களையும் கைகளையும் நீட்டுவோம். புத்தாண்டை

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி – 2024 Read More »

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு

டான் தொலைக்காட்சி குழுமத்தால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று திங்கட்கிழமை மாலை (23.12.2024) கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மின்விளக்குகளை ஒளிரச் செய்து அதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களும் பங்கேற்றார்.

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு Read More »

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (23.12.2024) சந்தித்துக் கலந்துரையாடினர். வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுவதாகவும் செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் முறையிட்டனர். வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும்

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் இன்று திங்கட் கிழமை  (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்;டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்தார். யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »