ஆளுநர்

காணியற்றவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் அரச காணிகள் இருக்கதக்கதாக காணிகள் அற்றவர்கள் பட்டியல் இருக்கின்றமை வேதனையானது. அதனைத் தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ் 85 மில்லியன் ரூபா செலவில், வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் கடந்த […]

காணியற்றவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு சனிக்கிழமை காலை (04.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் அவர்களும் பங்கேற்றிருந்தார். ஆளுநர் மற்றும் துணைத்தூதுவர் இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு வடக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு Read More »

புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் தொடர்பாக ஆளுநர் நேரில் ஆய்வு

ஏ- 35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அந்த வீதியூடாக  03.01.2025 திகதி வெள்ளிக்கிழமை  பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை

புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் தொடர்பாக ஆளுநர் நேரில் ஆய்வு Read More »

கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது

ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 29.75 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட கட்டடம், வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் அவசியமாக இருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளரால்

கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது Read More »

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளரால், திணைக்கள ரீதியான செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பான தேவைப்பாடுகள், வைத்திய அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு மாவட்டங்களில் காணப்படும் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும்

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை

புத்தாண்டு அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (02.01.2025) காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இடம்பெற்றது. நடமாடும் சேவைக்கு முன்னதான மன்னார் மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. புலவுக்காணிகளில் அமைக்கப்பட்டுள்ள

ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை Read More »

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார்.

வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை காலை (01.01.2025) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். Read More »

‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது

உள்ளூர் கைப்பணிக் கலைஞர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் நடத்தப்படும் ‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து 119 ஆக்கங்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் 29

‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக 01.01.2025 அன்று புதன்கிழமை காலை  ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மான சந்திப்பு Read More »

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01.01.2025 அன்று புதன்கிழமை  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதிமொழியெடுக்கும் நிகழ்வை வடக்கு மாகாண ஆளுநர் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் கொடியை வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து,

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »