ஆளுநர்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இந்த புத்தகத்திருவிழாவில் அதிகளவு வாசகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலை […]

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை Read More »

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு

மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 27 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமாகவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு Read More »

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 26 ஆகஸ்ட் 2019 அன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian ஒருங்கிணைந்த மோதல் பகுப்பாய்வு செயல்முறை ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா “தொட்டணைத்தூறும் மணற்கேணி”  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் 23 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர்

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘வடக்கு வட்டமேசை’ (‘‘Northern_Province_Round_Table’’) கலந்துரையாடல் நாளை (22) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் இம்முறை ‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நுண்கடன் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ Read More »

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து 19 ஆகஸ்ட் 2019 அன்று உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள் , உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள்

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மதசுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் திரு அகமட் சாஹிட் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 17 ஆகஸட் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர்

கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 17 ஆகஸ்ட் 2019 அன்று ஏற்பாடுசெய்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர் Read More »

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அடிப்படையாக இருக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் வேண்டும். பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் எப்போதும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடக்கிற்கான சர்வதேச நீர்வள மாநாட்டிற்கான இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் அவர்கள் தலைமையில் 16 ஆகஸ்ட் 2019 அன்று மாலை இடம்பெற்றது. 2030 ஆம் ஆண்டளவில் எமக்கு குடிநீர் தேவையாக தண்ணீரீன்

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர் Read More »