கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா
மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதியை திறந்துவைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் மாணவர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், கிராமப்புற பாடசாலைகளுக்கான வளப்பற்றாக்குறை, வளப்பங்கீடு என்பதுதான் மாகாணசபையில் தற்போது முதன்மை பெறுகின்றது. அந்த வகையில் கிராமப்புற […]
