ஆளுநர்

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம்

மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கான கட்டட திறப்பு விழா, வடமாகாணத்திற்கு உட்பட்ட சிறந்த விவசாயிகளுக்கான விருது மற்றும் சான்றிதழ், காசோலை வழங்கும் நிகழ்வும் மற்றும் புதிய விவசாய போதனாசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் 19 ஏப்பிரல் 2021 அன்று காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் வடமாகாண பிரதம செயலாளர், […]

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம் Read More »

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கிராமிய குளங்கள்,  அணைக்கட்டுக்களை அபிவிருத்தி செய்தலின் கீழ் பினாக்காய் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் 19 ஏப்பிரல் 2021 காலை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பினாக்காய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் பிரதமசெயலாளர், வடமாகண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். இச் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு

அச்சுவேலி கோழி பண்ணையில் 15,000 முட்டைகளை ஓரே நேரத்தில் பொரிக்கவைக்கும் இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு 19 ஏப்பிரல் 2021 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் இயந்திரம் மற்றும்

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அமரர் வேலாயுதன் சிவஞானசோதி அவர்களது பிரிவுத்துயர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் சிறப்பு இளமணி பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கருத்திட்ட திட்டமிடலிலும் மேற்பார்வையிலுமான விஞ்ஞான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றிருந்ததுடன் இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்தின் உறுப்புரிமையையுடன் கொண்டிருந்தார். மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராக பதவி

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். நல்லதொரு ஆன்மீகத் தலைவரை வட பகுதி இன்று இழந்து நிற்கின்றது. இன, மத, குல பேதங்களை கடந்த இவரின் இழப்பு வடபுல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு அடிகளாரின் மறைவினையொட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடைய பிரார்த்திக்கின்றோம். யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவைப்

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகாரத்துறை அமைச்சின் செயலாளர், கல்வித்துறை வடமாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விருதுபெறும்

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு Read More »

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்இ வடமாகாண விவசாய அமைச்சுக்கு கீழான விவசாய போதனாசிரியர்இ விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று 9 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் 19 மார்ச் 2021 அன்று மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் அவர்கள்

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் 18 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரமேஸ் பத்திரன, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான கௌரவ திரு கே. என்.

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம். Read More »