ஆளுநர்

ஆளுநருக்கும் லண்டன் நகர பிதாவும் இடையிலான சந்திப்பு

லண்டன் போரோ ஒப் ப்ரன்ற் இன் நகரபிதா ஏர்னஸ்ற் எசாயாயுகி அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (ஒக்.21)லண்டனில் இடம்பெற்றது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநருக்கும் லண்டன் நகர பிதாவும் இடையிலான சந்திப்பு Read More »

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு

லண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிறு (ஒக்.20) முற்பகல் லண்டனில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின்  கல்வி ,சுகாதாரம் ,விவசாயம் ,இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு Read More »

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 21 ஒக்ரொபர் 2019 அன்று முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. லண்டனுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் , அதற்கு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உதவ வேண்டுமென்றும் ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »

முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் தலைமையில் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 15 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது . -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் தலைமையில் திறப்பு Read More »

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

”சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லாக் காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்புச் சமனாக இருத்தல் வேண்டும்.” வட மாகாண பெண்கள் சாரணியத்தை மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தினால் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் 12 அக்டோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தெற்கு ஆசியாவில்

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது ஆளுநர் என்ற ரீதியில் போருக்கு பின்னரான வடமாகாணத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்ததுடன், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடுவதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். மேலும், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாண மக்களுடைய அபிவிருத்திக்கு இந்த வங்கி எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள வங்கியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இந்த கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பிரித்தானிய அரசின் உதவியினையும் எதிர்பார்த்திருப்பதாக

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார் Read More »

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன. வடமகாண ஆளுநர் கலாநிதி

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 13 ஒக்ரோபர் 2019 அன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் இ இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குபின்னரான

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன் /புத் /றிஸ்வான் அமுகபா ,மன் /புத் /ஆப்தீன் அமுகபா , மன் /புத் / அன்சரி அமுகபா , மன் /புத் / ஹஸ்பன் அமுகபா ,மன்/

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு Read More »

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர்

போர் எங்களை தாக்கியது மட்டுமல்லாது எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன. எனவே அதனை நாம் செம்மைப்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ மட்டத்தினை பூர்த்தி செய்த 245 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு    

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர் Read More »