ஆளுநர்

கலைக்கு இன, மத, மொழி வேலிகள் கிடையாது” – வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

கலைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை. அண்மையில் எமக்கு ஏற்பட்ட பேரிடரின்போது எவ்வாறு இனம், மதம் பாராது மனிதத்தை மட்டும் முன்னிறுத்தி அனைவரும் உதவினார்களோ, அதேபோன்று கலைகளும் மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமைகின்றன, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு […]

கலைக்கு இன, மத, மொழி வேலிகள் கிடையாது” – வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (16.12.2025) செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 284 பாடசாலை

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்களிடமிருந்து பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து, ‘வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை’ உருவாக்குவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, பதிவு செய்யப்பட்ட

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை Read More »

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை (20.12.2025) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்தாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார். இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்து, நாளை வரை (16.12.2025) பரீட்சைக்கான அனுமதி அட்டை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை Read More »

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர்

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும், அது விட்டுச்சென்ற சுவடுகளைப் பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் இன்று (12.12.2025) வெள்ளிக்கிழமை மாலை, கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்று,

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர் Read More »

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டும் போதாது. அவர்கள் தங்கள் முன்னைய நிலையை விடப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேலோங்கி வர வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12.12.2025) நடைபெற்ற உலக மண்

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின்

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்த ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது என்பதைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம். எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும். எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது Read More »

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன.

மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் லலித் பண்டார அவர்களிடம் நேற்று (10.12.2025) புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மயிலிட்டி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், மயிலிட்டி – திருப்பூர்

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. Read More »