npc2018z

வட மாகாண எழுத்தாளர் அவை – 2022

கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “வடமாகாண எழுத்தாளர் அவை” அங்குரார்ப்பணநிகழ்வு 07.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வானது இனிதே […]

வட மாகாண எழுத்தாளர் அவை – 2022 Read More »

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு

வடமாகாண சபை வளாகத்தின் பிரதம செயலாளர் செயலகத்திற்கான மரநடுகை நிகழ்வானது வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 13.12.2022 மற்றும் 14.12.2022 ஆகிய தினங்களில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மர நடுகையை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உதவிப் பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்,பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மரநடுகையை மேற்கொண்டனர். இம் மரநடுகை நிகழ்வில் புங்கை மரங்கள், தேக்கு, மா, பலா

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மும்மொழி கற்றல் நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 19.12.2022 அன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர்-வடக்கு மாகாணம் அவர்களும், செயலாளர் கல்வி அமைச்சு-வடக்கு மாகாணம் அவர்களும் சிரேஸ்ட உதவிச் செயலாளர்-கல்வி அமைச்சு, பிரதம கணக்காளர்-கல்வி அமைச்சு, உதவிச் செயலாளர்-இளைஞர் விவகார

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார்

மூலிகை தோட்டம் மற்றும் மூலிகை சார் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடந்த 04/12/2022ம் திகதி மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலையில் மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏறத்தாழ 150 மூலிகைக் கன்றுகள் மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டு, வைத்தியசாலை வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான கன்றுகள் நாட்டப்பட்டதுடன் ஏனைய கன்றுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மூலிகை

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார் Read More »

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம்

யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலவச சித்த வைத்தியசாலைகளில் கடமைபுரியும் ஒரு தொகுதி மருந்துக்கலவையாளருக்குகான பயிற்சி நெறியானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் உள்ளூராட்சித்திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. இப்பயிற்சி நெறியானது மருந்துக்கலவையாளர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடாத்தப்பட்டது. 28/11/2022 ஆரம்பித்த இப்பயிற்சி நெறியானது 6/12/2022 வரை 7 நாட்கள் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில்;

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம் Read More »

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம்

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு நெசவுத்தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடினர். மேலும் மனிதவலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை பார்வையிட்டு தமது பாராட்டுகளையும்

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம் Read More »

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் விருத்தி மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பயிற்சித்திட்டமானது 2022.11.26(சனிக்கிழமை), 2022.11.27(ஞாயிற்றுக்கிழமை) ஆம் திகதிகளில் முறையே வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. வவுனியா, மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் மயிலூரான் மண்டபத்திலும் காலை 9.00மணி தொடக்கம் பி.ப

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் விருத்தி மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம். Read More »

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்யும் முகமாக தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுடனான விற்பனை சந்தையானது யாழ்ப்பாணம் புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் 28.11.2022ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி விற்பனை சந்தையானது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதை பிரதானமான நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இவ் விற்பனைச்சந்தை காலை 8.30 மணி ஆரம்பமாகி

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022 Read More »

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022

தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட வடமாகாண கைத்தறி நெசவுப் போட்டியானது 18.10.2022ம் திகதி அன்று ஆசிரியர் பயிற்சிகூடம் நல்லூரில் நடாத்தப்பட்டது. பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களானது புடைவை கைத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடுவர் குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களால் வழங்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 31 வெற்றியாளர் பரிசில் வழங்குவதற்க்கு தகுதியானவர்களென தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 26.11.2022ம் திகதி யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மிகச்

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022 Read More »

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா கடந்த 17.11.2022 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியிலும் கிளிநெச்சி மாவட்டத்தில் இரணைமடு இடது கரை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ9 மாங்குளம் வீதியின் இரு ம ருங்கிலும் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக் குளம் அரசு விதை உற்பத்தி பண்ணைப்பகுதியிலும் மன்னர் மாவட்டத்தில்

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா Read More »