npc2018z

சித்தர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் கடந்த 09/01/2023 அன்று சித்தர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்பபடும் அகஸ்தியர் பிறந்ததினமான ஆயிலிய நட்சத்திரத்தன்று சித்தர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அதன் அடிப்படையில் இவ்வருடம் மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம், மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவு, மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலி மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையும் அரச மூலிகைத் தோட்டமும் – கல்மடுநகர் ஆகிய நிறுவனங்களில் சித்தர் தினமானது […]

சித்தர் தினம் அனுஸ்டிப்பு Read More »

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர்

தெல்லிப்பளை கிராமிய சித்த வைத்தியசாலையினால் நடமாடும் மருத்துவ சேவையானது குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தில்; கடந்த 04/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையானது யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் நடைபெறத் திட்டமிப்பட்டுள்ளது. இச்சேவை வழங்குவதற்குரிய கட்டட வசதியானது குருநகர் ஐக்கிய முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள், அருட்ச்சகோதர்களான அருளானந்தம் ஜவின் மற்றும்

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர் Read More »

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி

சித்த மருந்துகள் கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் தனியார் வைத்தியர்களிற்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்கும் வகையில் சித்த மருந்து விற்பனை நிலையமானது கடந்த 04/01/2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையமானது கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சித்த

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி Read More »

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

சார்க் குழுமத்தின் பிரதிநிதிகள் 06.01.2023 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கௌரவ ஆளுநரின் வழிகாட்டலுக்கமைய சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். அங்கு நெசவுத் தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் அந்நிலையத்தில் வேலை செய்யும் பெண் நெசவுத் தொழிலாளர்களுடனும் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப் பணிப்பாளருடனும் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மேலும் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம் Read More »

ஒளி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய வட மாகாண ஒளி விழாவானது 2022.12.26 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் அருட்பணி J.B அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை, புனித பேதுறு பாவிலு ஆலயம், நவாலி) அவர்களின் இறையாசியுடன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,

ஒளி விழா– 2022 Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2023 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வைபவம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 02.01.2023 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்; – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வடக்கு

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திலுள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 Read More »

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கைத்தறி நெசவுப் பயிற்சி நிலையத்திற்கு 18 டிசெம்பர் 2022 அன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது நெசவாளர்களுடன் தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் நெசவாளர்களின் தயாரிப்புகளில் காணப்படும் அவர்களின் முயற்சியையும் பாராட்டினர். மேலும் நெசவுத் தயாரிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதன்போது மொத்த விற்பனையானது ரூபாய் 67,000.00 ஆகக் காணப்பட்டது.        

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் Read More »

வடமாகாண சபை ஒளிவிழா – 2022

வடமாகாண சபை ஒளிவிழா-2022 நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் 27.12.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவாபோல் அவர்களும் மற்றும் கல்வாரி ஆலய பிரதம போதகர் விக்ரம் அவர்களும் கலந்துகொண்டதுடன் பிரதிப் பிரதம செயலக செயலாளர்கள்,

வடமாகாண சபை ஒளிவிழா – 2022 Read More »

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடமாடும் மருத்துவ சேவையானது கடந்த 07.12.2022 அன்று 19ம் கட்டை, கரியாலை நாகபடுவான், கிளிநொச்சியில் ஆரம்பிக்கபட்டது. கரியாலை நாகபடுவான் அறம் செய் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்நடமாடும் சேவையானது இவ்விடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் ஏறத்தாழ 85 நோயாளர்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனையைப் பெற்று நன்மை அடைந்ததுடன் பூநகரி பிரதேச செயலக சமூக மருத்துவ உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர்கள், அறம் செய் அறக்கட்டளை

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான் Read More »