npc2018z

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு

வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளிலான உறுதி மொழி எடுக்கும் வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 07 ஒக்ரோபர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் , அரச அலுவலகங்கள் , அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் பிரதானிகளின் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்கள் தலைமையில் 07 ஒக்ரோபர் […]

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு Read More »

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர்

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு முதன்முறையாக வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களை சேர்ந்த சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் தொடர்பிலான கூட்டம் 04 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் , இந்த நிகழ்வின் முதற்கட்டமாக வீதி

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர் Read More »

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை இருக்கவேண்டும் . நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கார்கில்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கான கார்கில்ஸ் சாரு பிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித்தொகை வழங்கும் 2018 -2019 நிகழ்வு 04 ஒக்ரோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் இடம்பெற்றறது.

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர் Read More »

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதியில் வர்த்தமானி அறிவித்தலின் படி காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதினால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் 03 ஒக்ரோபர் 2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவத்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவதந்தனர். ஆனாலும்

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா”

கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா 02.10.2019 ஆம் திகதி அன்று உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர்; க.மதனராஜ் குலாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் வலய உதவிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், உதவிப் பண்ணை முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா” Read More »

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா

ஓமந்தையிலுள்ள காயாங்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா 01.10.2019 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிய வெங்காயச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய வெங்காயச் செய்கையானது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவிலான விஷ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே பெரிய வெங்காயச் செய்கைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தன் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெரியவெங்காயவிதை வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைகளின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா Read More »

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03 ஒக்ரோபர் 2019 அன்று நடைபெற்றது. அதன் பின்னர் பிரச்சினை காணப்படும் குறித்த பிரதேசத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை ஆளுநர் மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் போது 1984இற்கு முன்னர் இந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் போர் காரணமாக நீண்டகாலம் இடம்பெயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் Read More »

கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டம் கணுக்கேணி கிராமத்தில் குழாய்க்கிணறு மூலமாக நீரினை அதிகளவில் இராணுவத்தினர் பயன்படுத்துவதால் அந்தப் பிரதேசத்தில் நிலத்தடி நீர் குறைவடைந்து வருவதாக பிரதேச மக்களினால் ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03 ஒக்ரோபர் 2019 அன்று இடம்பெற்றது. இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து

கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப்பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத்

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

அத்தாய் பிரதேச விவசாயிகளுடன் கௌரவ ஆளுநர் சந்திப்பு

பூநகரி அத்தாய் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கைக்காக நெல்விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் சிலரை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (03) காலை சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்தாய் பிரதேச விவசாயிகளுடன் கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »