ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலில் ஹய்ரெக் லங்காவின் தேசிய தொழில் தகமை தொழிற்பயிற்சி கருத்தரங்கு
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது. ஆளுநர் செயலகம் , மாவட்டச் செயலகம் மற்றும் ஹய்ரெக் லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும் நடாத்தவுள்ள இந்த கருத்தரங்கில் மின் இணைப்பாளர் , கனரகவாகன இயக்குனர், கட்டுமானப்பணியாளர், வாகனம்திருத்துநர், […]
