npc2018z

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுங்கேணி, கனகராயன்குளம், பம்பைமடு, உளுக்குளம் மற்றும் செட்டிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த 07.10.2019, 08.10.2019 மற்றும் 10.10.2019 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. இதன்போது நதிப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2000 மரங்கள் நாட்டப்பட்டன. இம் மரநடுகை நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம் Read More »

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ஓமந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதியன்று நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயிகள் சேற்று விதைப்பையே அதிகம் மேற்கொண்டு வருவதுடன் நாற்று நடுகை முறையை மிக அரிதாகவே பின்பற்றுகின்றனர. ஆனால் ஏனைய விதைப்பு முறைகளிலும் நாற்று நடுகைத் தொழில்நுட்பமானது அதிக விளைச்சலைத் தருவதுடன், ஏக்கருக்குத் தேவையான விதை நெல்லின் அளவும் குறைவு. மேலும் இது நோய்த்

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு Read More »

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று மாமரத்தில் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. பொதுவாக கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன், நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி Read More »

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன. வடமகாண ஆளுநர் கலாநிதி

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 13 ஒக்ரோபர் 2019 அன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் இ இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குபின்னரான

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன் /புத் /றிஸ்வான் அமுகபா ,மன் /புத் /ஆப்தீன் அமுகபா , மன் /புத் / அன்சரி அமுகபா , மன் /புத் / ஹஸ்பன் அமுகபா ,மன்/

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு Read More »

பயிர்ச்சிகிச்சை முகாம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட பயிர்ச்சிகிச்சை முகாமொன்று வவுனியா சந்தை வட்டாரத்தில் கடந்த 11.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இச் சந்தை வட்டார பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குறித்த இடத்தில் நடாத்தப்பட்டுவருகிறது. இதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் தாவர வைத்தியர்களுடன் தாம் பயிர்ச்செய்கையில் எதிர்கொள்ளும் நோய், பீடைத் தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

பயிர்ச்சிகிச்சை முகாம் Read More »

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர்

போர் எங்களை தாக்கியது மட்டுமல்லாது எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன. எனவே அதனை நாம் செம்மைப்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ மட்டத்தினை பூர்த்தி செய்த 245 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு    

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர் Read More »

வடமேல் மாகாண ஆளுநர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை சம்பிரதாயபூர்வமாக 11 ஒக்ரோபர் 2019 அன்று ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வடமேல் மாகாண ஆளுநர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

ஒரு சமூகத்தின் அலங்காரத்தை காணும் இடம்தான் திறந்த வெளி. திறந்த வெளியை காணும் முக்கிய இடமாக இப்போது சாலையும் வீதியும் காணப்படுகின்றது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் வழிநடத்தலில் ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இவ்வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி தலைமையில் 11 ஒக்ரோபர் 2019 அன்று காலை 9.00 மணிக்கு வடமாகாண

வடமாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »