npc2018z

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ்; நிலக்கடலை விதை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன்; விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளீடுகளாக ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20Kg ஜம்போ நிலக்கடலை விதை, 25Kg ஜிப்ஸம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் தற்போது அறுவடை நிலையில் காணப்படுகின்றது. மேற்படி நிலக்கடலைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு பயனுடையதாக […]

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா Read More »

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம்

மாகாண விவசாயத் திணைக்களத்தால் உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொடித் தோடைச் செய்கைக்கான 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகள் விநியோக நிகழ்வு 12.05.2020 அன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் திரு.க.பத்மநாதன் அவர்கள் தனது

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம் Read More »

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது. யாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில்

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும் Read More »

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவுகையினால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உணவப் பற்றாக்குறை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதனால் அதனை எதிர்கொள்ளும் நோக்கில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்; “CRIWMP” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் உலுக்குளம், செட்டிக்குளம், கோவில்குளம், பம்பைமடு மற்றும் மடுக்கந்த விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நெல் மற்றும் மறு வயற்பயிர்களிற்கான விதை உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுபோகம்,

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி Read More »

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய 26.03.2020 இல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.   ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் பலசரக்கு பொருட்கள் உள்ளூர் பலசரக்கு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் Read More »

யாழ் பிராந்திய மக்களுக்கான வடமாண ஆளுநர் செயலகத்தின் அவசர அறிவித்தல்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தற்போது அவருக்கு கொறோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவ் ஆராதனையில்

யாழ் பிராந்திய மக்களுக்கான வடமாண ஆளுநர் செயலகத்தின் அவசர அறிவித்தல் Read More »

வடமாகாணத்தினை பாதுகாக்க எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஆளுநர் செயலகம் அறிவுறுத்தல்.

வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 19 மார்ச் 2020 அன்று வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது அத்தியாவசியத்தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு பிற்பகல் 3.00 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக

வடமாகாணத்தினை பாதுகாக்க எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஆளுநர் செயலகம் அறிவுறுத்தல். Read More »

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல்

உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கான பரம்பலை ஏற்படுத்தியவர்கள் என்று அவதானிக்கபட்டுள்ளது. இதன்பொருட்டு வடமாகாணத்திற்கான நிலமைகளை கருத்திற்கொண்டு இங்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் ஆளுநர் செயலகம் உரிய அமைச்சுக்கள்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் Read More »

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை Read More »