npc2018z

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து […]

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்ன வெங்காய உண்மை விதை அறுவடை விழா

தேசிய விஞ்ஞான கழகத்தின் நிதி அனுசரனையில் உண்மை விதை உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை துல்லியமாக உய்த்தறிவதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழப்பாண மாவட்டங்களில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்திக்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்யும் நோக்குடனும் அதன் பேண்தகு தன்மையினை உறுதிப்படுத்து முகமாகவும் போட்டி ஆராய்ச்சி கொடுப்பனவிற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளரும், கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் பேறாக 05/04/2021 ஆந்

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்ன வெங்காய உண்மை விதை அறுவடை விழா Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அமரர் வேலாயுதன் சிவஞானசோதி அவர்களது பிரிவுத்துயர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் சிறப்பு இளமணி பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கருத்திட்ட திட்டமிடலிலும் மேற்பார்வையிலுமான விஞ்ஞான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றிருந்ததுடன் இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்தின் உறுப்புரிமையையுடன் கொண்டிருந்தார். மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராக பதவி

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா 31.03.2021 அன்று சண்டிலிப்பாய் விவசாய போதனாசிரியர் பரிவில் பிரான்பற்று கிராமத்தில் நடைபெற்றது. இவ் வயல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய பணிப்பாளர் திரு. சி. சிவகுமார், சிறப்பு விருந்தினராக பொறுப்பதிகாரி ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி திருமதி. பா.பாலகௌரி, யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ. ஸ்ரீரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எஸ். ராஜேஷ்கண்ணா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.குலோத்துங்கன், விவசாயத் திணைக்கள

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். நல்லதொரு ஆன்மீகத் தலைவரை வட பகுதி இன்று இழந்து நிற்கின்றது. இன, மத, குல பேதங்களை கடந்த இவரின் இழப்பு வடபுல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு அடிகளாரின் மறைவினையொட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடைய பிரார்த்திக்கின்றோம். யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவைப்

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம்

கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ”பேண்தகு கல்விக் கொள்கைச் சட்டகமொன்றை” உருவாக்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ”டிஜிடல் தளம்” ஒன்று ”அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி” என்னும் கருப்பொருளுடன் உத்தியோகபூர்வமாக 26 மார்ச் 2021 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 03 மாதங்கள் www.egenuma.moe.gov.lk எனும் இணையதளம் மூலம் மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்கான கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம்

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம் Read More »

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகாரத்துறை அமைச்சின் செயலாளர், கல்வித்துறை வடமாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விருதுபெறும்

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு Read More »

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்இ வடமாகாண விவசாய அமைச்சுக்கு கீழான விவசாய போதனாசிரியர்இ விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று 9 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் 19 மார்ச் 2021 அன்று மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் அவர்கள்

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் 18 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரமேஸ் பத்திரன, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான கௌரவ திரு கே. என்.

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம். Read More »