npc2018z

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வட மாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளருக்கான நியமனக்கடிதம் திரு.ராஜேந்திரா சசீலன் அவர்களுக்கு வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் 10 மே 2021 அன்று காலை வழங்கிவைக்கப்பட்டது. அதன் போது கிராம அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு தேவையான விழி;ப்புணர்வுகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்த கௌரவ ஆளுநர் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பினை எதிர்காலத்தில் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளம் விவசாயிகள் கழகத்திற்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் வழங்கப்பட்ட நெல் நாற்று நடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்முறை ரீதியான முன்மாதிரி (Method Demonstration) நிகழ்வானது 20.04.2021 அன்று காலை 10.00 மணியளவில் கரியாலை நாகபடுவான் இடதுகரை கமக்காரர் பிரிவில் 12ம் வாய்க்கால் பகுதியில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன் மாதிரி விவசாயிகளான திரு. செ. திருச்செல்வம், திரு. சி. ஜெயக்குமாரசிங்கம் ஆகியோரின் வயலில்

கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு Read More »

தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை தொடர்பான கலந்துரையாடல்

29 ஏப்பிரல் 2021 அன்று காலை 10 மணிக்கு வடமாகாணத்தில் தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் பிரதமசெயலாளர் , ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்செயலாளர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர் , மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் , வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்ட அரச அதிபர்கள் , யாழ் போதனா வைத்தியசாலை

தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை தொடர்பான கலந்துரையாடல் Read More »

தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 27 ஏப்பிரல் 2021 அன்று காலை 9மணிக்கு நாகதீப ரஜமகா விகாரையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரோ அவர்களும் வெசாக் பண்டிகை நடாத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் , ஒழுங்கமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந் நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும்

தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் Read More »

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

வவுனியா மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27.4.2021) காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில்வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உப தலைவருமான கௌரவ கு. திலீபன் மற்றும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான், கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் வவுனியா

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20.4.2021) காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர் ,ஆளுநரின் இணைப்புச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் , நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) உயர் அதிகாரிகள் ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவிமாவட்டச் செயலாளர் ,நல்லூர் ,யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், மாநகர

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல் Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு

2019 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதுமாக அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்டு வடக்கு மாகாண சபை அலுவலகங்களில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 361 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 19 ஏப்பிரல் 2021 அன்று மாலை 3.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு Read More »

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம்

மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கான கட்டட திறப்பு விழா, வடமாகாணத்திற்கு உட்பட்ட சிறந்த விவசாயிகளுக்கான விருது மற்றும் சான்றிதழ், காசோலை வழங்கும் நிகழ்வும் மற்றும் புதிய விவசாய போதனாசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் 19 ஏப்பிரல் 2021 அன்று காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் வடமாகாண பிரதம செயலாளர்,

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம் Read More »

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கிராமிய குளங்கள்,  அணைக்கட்டுக்களை அபிவிருத்தி செய்தலின் கீழ் பினாக்காய் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் 19 ஏப்பிரல் 2021 காலை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பினாக்காய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் பிரதமசெயலாளர், வடமாகண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். இச் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு

அச்சுவேலி கோழி பண்ணையில் 15,000 முட்டைகளை ஓரே நேரத்தில் பொரிக்கவைக்கும் இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு 19 ஏப்பிரல் 2021 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் இயந்திரம் மற்றும்

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »