npc2018z

‘சில்ப அபிமானி’ – மாகாண மட்ட கைப்பணிப் போட்டி – 2021 விருது வழங்கும் விழா

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து இவ்வாண்டு ஓக்ரோபர் மாதம் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா  வித்தியாலயத்தில் நடாத்திய மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ‘சில்ப அபிமானி’ ஜனாதிபதி விருது கைப்பணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழா தொழிற்துறை திணைக்கள பணிப்பாளரின் தலைமையில் ஹோட்டல் திண்ணையில் இல் டிசம்பர் மாதம் 12ம் திகதி […]

‘சில்ப அபிமானி’ – மாகாண மட்ட கைப்பணிப் போட்டி – 2021 விருது வழங்கும் விழா Read More »

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்

சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்து ஆரம்பித்தார். சீனத் தூதுவர் வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இதன் சேகரிப்பை பெரிதாக்கவும் வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் Read More »

வீரமணி ஐயரின் ஆக்கங்கள் (தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “வீரமணி ஐயரின் ஆக்கங்கள்(தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 13 டிசெம்பர் 2021 அன்று பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

வீரமணி ஐயரின் ஆக்கங்கள் (தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா -2021 Read More »

வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2021

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடகக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்கலை மூலமாக 15.10.2021தொடக்கம் 20.10.2021 வரை நடைபெற்றது. மேற்படி பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட கலைஞர்களின் வேண்டுகோளிற்கமைய கலாநிதி க.ரதிதரன், தலைவர் நுண்கலைத்துறை , சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மற்றும் திருவாளர்.தி.தர்மலிங்கம் விரிவுரையாளர் நடனமும் நாடகத் துறை , விபுலானந்தா அழகியற்கற்கைகள் பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகிய வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ரீதியாக பயிற்சிப்பட்டறை 20.11.2021 தொடக்கம் 19.12.2021 வரை

வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2021 Read More »

“பதிற்றுப்பத்து”, “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூல்கள் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்பு செய்யப்பட்ட “பதிற்றுப்பத்து” நூலும், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூலும், கல்வி அமைச்சின் மண்டபத்தில் 06.12..2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநாகரசபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பழைமையான நூல்களை அழியவிடாது

“பதிற்றுப்பத்து”, “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூல்கள் வெளியீட்டு விழா -2021 Read More »

மதவழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கான இலவச மருத்துவமுகாம் – யாழ்ப்பாணம்

கௌரவ ஆளுநரின் நெறிப்டுத்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் ஈடுபடுவோருக்கான இலவச மருத்துவ முகாம் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச செயலகர் பிரிவில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. பிரதம செயலாளர் எஸ்.எம்.பந்துலசேன, கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம், வடமாகாண வருவாய் திணைக்கள ஆணையாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர்கள் வைத்தியர் நிக்சன், யாழ் சுகாதார வைத்திய

மதவழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கான இலவச மருத்துவமுகாம் – யாழ்ப்பாணம் Read More »

மாகாண புடவைக் கைத்தொழில் போட்டி 2021

உள்ளூர் நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புடவைக் கைத்தொழில் திணைக்களத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டியானது சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டு நவம்பர் மாதம் 06ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது. வடமாகாண ரீதியாக மொத்தமாக 216 கைத்தறி நெசவு ஆக்கங்கள் போட்டிக்கு நெசவாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

மாகாண புடவைக் கைத்தொழில் போட்டி 2021 Read More »

“நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 29.11.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கிராமியக் கலைகளின் அடிநாதங்களாகத் திகழும் கூத்துக்களின் ஒரு அங்கமாகவே இந் நூலானது

“நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா -2021 Read More »

‘சில்ப அபிமானி’ – மாகாண கைப்பணிப் போட்டி 2021

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டி சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டும் ஓக்ரோபர் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர், பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது. வடமாகாண ரீதியில் 1700 கைப்பணி ஆக்கங்கள் கைப்பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.

‘சில்ப அபிமானி’ – மாகாண கைப்பணிப் போட்டி 2021 Read More »

வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவ துறையினரின் பங்களிப்புடன் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கருத்தமர்வு 29.11.2021 ஆம் திகதி மு.ப 11.00 மணிக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலுக்கு அமைச்சின் செயலாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் சமுதாய மருத்துவ துறையினர் பங்குபற்றியிருந்தனர். யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவபீடத்தினர் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேசங்கள் தோறும் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கடமையாற்றுவதற்கான ஒரு

வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு Read More »