Balasingam Kajenderan

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் நேரடி விஜயம்

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் நிலைமைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை (28.08.2025) நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர் நலன்புரி சங்கத்தினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆளுநருடனான சந்திப்பு மன்னார் நகர சபையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் மன்னார் மாவட்டச் செயலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட மருத்துவமனை மாகாண சபையிருந்த […]

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் நேரடி விஜயம் Read More »

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. அவற்றை நாம் மறக்கக் கூடாது. – ஆளுநர்

பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – 2025 இன்று வியாழக்கிழமை காலை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன்

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. அவற்றை நாம் மறக்கக் கூடாது. – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கௌரவ பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (27.08.2025) இடம்பெற்றது. பதில் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார். தொடர்ந்து வடக்கு மாகாண

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. Read More »

ஆளணி வெற்றிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் – முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்

வடக்கு மாகாணசபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.08.2025) இடம்பெற்றது. பதில் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில்

ஆளணி வெற்றிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் – முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார் Read More »

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (26.08.2025) இடம்பெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். காணி வழங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (26.08.2025) இடம்பெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், அதிகாரிகளுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேர்மையாகச் செயற்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர்

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை படிப்படியாக எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், இதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மருத்துவமனையின் செயற்பாடுகளை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (25.08.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மேற்படி

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர் Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

தெய்வீக சுகானுபவம் – 11

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் பதினோராவது (11) நிகழ்வானது 2025.08.20 புதன்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நல்லூர்க் கோட்டக்கல்வி அலுவலக முன்றலில் (முன்னாள் யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்) வடக்கு மாகாண கல்விஇ பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக

தெய்வீக சுகானுபவம் – 11 Read More »

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நாள்

  நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 21.08.2025 அன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு அமைவான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் சனிக்கிழமை 30.08.2025 அன்று நடைபெறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நாள் Read More »