நவீன முறையினூடாக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் – ஆளுநர்
எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு பேரம்பேசி எமக்குத் தேவையானதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனூடாக எமது மாகாண மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் செல்வா பலஸில் இன்று சனிக்கிழமை மாலை (27.09.2025) மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய […]
