தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு ஆளுநர் பாராட்டு
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுமருத்துவமனைப் பணிப்பாளர்கள், ஆதார மருத்துவமனைப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை […]