Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19/06/2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்  நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும், யாப்பாணத்திற்கான  இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தை […]

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது Read More »

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்,  இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட்  நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம்

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல் Read More »

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலங்களினூடாகவும் கலாசார அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.  இச்செயற்திட்டமானது ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பிரதேச செயலகங்களினூடாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகினூடாக பிரதேச செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு கலைஞர் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் கலாசார உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. கலைஞர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் முதற்கட்டமாக கலைஞர் ஒன்றுகூடலானது முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒன்றுகூடலானது பிரதேச கலைஞர்களின்

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள் Read More »

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (07/06/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள்,

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (05/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர்  செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு Read More »

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும்

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் இன்றைய (03/06/2024) தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாளை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும் Read More »

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று  (30/05/2024) மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய, அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். அனுமதிப்பத்திரம் இன்றி சில

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத்

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி Read More »

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து  வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர்தெரிவிப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் இன்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர்தெரிவிப்பு Read More »