பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்! வடக்குமாகாண ஆளுநர் அறிவுறுத்தல்!
இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட பிராந்திய சங்கத்தினரால் நடாத்தப்பட்ட “தொழில்நுட்ப வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா, வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. (22/02/2024) இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும், விஷேட விருந்தினராக மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கலந்து சிறப்பித்தனர் . நூல்வெளியீட்டின் முதற்பிரதியை வடக்கு மாகாண கெளரவ ஆளுநர், பிரதம செயலாளருக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். […]
