மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட […]
