Balasingam Kajenderan

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

தென்மாகாண கௌரவ ஆளுநர் பந்துல ஹரிசந்திர அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.11.2025) அங்கு நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். Read More »

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி

வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை நாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும், வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினரை இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத்

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி Read More »

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப உதவியுடன் அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களில் ஏற்கனவே இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த முயற்சியை மாகாணம் முழுவதும் விரிவாக்க

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம் Read More »

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர்.

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற, த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை காலை (17.11.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து முன்னேற்றங்களை விவரித்தனர். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாநாட்டின் ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்கள் பங்கேற்பு மற்றும் வடக்கின் முக்கிய

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர். Read More »

கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் கௌரவ ஆளுநரை சந்தித்தனர்.

வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘கழிவிலிருந்து மின்சார உற்பத்தி’ (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோன் அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்துள்ளார். இன்றைய தினம் திங்;கட்கிழமை (17.11.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் கௌரவ ஆளுநரை சந்தித்தனர். Read More »

வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களை ஒருங்கிணைத்து பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மாகாண நிர்வாகத்துக்கும், வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், இணைந்து

வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களை ஒருங்கிணைத்து பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர் ஆளுநரை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இலங்கையின் சில மாகாணங்களில் ஏற்கனவே மாகாண மட்டத்திலான நூலக சேவைகள் பணியகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் மாவட்ட மட்டமும், பிரதேச செயலக மட்டமும்

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பாரம்பரிய முறையிலான பயிர்ச்செய்கையைவிட நவீன முறையில் அண்ணளவாக இருமடங்கு விளைச்சல் கிடைக்கப்பெறுகின்றது. அதனை விவசாயிகளிடத்தில் ஊக்குவிப்பதில் அடுத்த ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்களை ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (13.11.2025) ஆளுநர் செயலகத்தில்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நகரை சுத்தமாக வைத்திருக்க மக்களும் பங்களிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தை ஒரு வரைபடப் பகுதியில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றுலாவிக்கும் — பார்வையாளருக்கும் துடிப்பான, செழிப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘வடக்கு இலங்கையை புதிதாய் கண்டறிதல்: இளைஞர்களுக்கு அதிகாரமளித்து புதிய சுற்றுலா அடையாளத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி நெறியில்

யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நகரை சுத்தமாக வைத்திருக்க மக்களும் பங்களிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில்

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர் Read More »