Kathir Sadagopan

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 29.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் சி.மதன் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.T.துர்க்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.ளு.விஜயதாசன் அவர்கள் […]

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodics cocois) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. வெண் ஈயானது தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் சிறிய பூச்சி ஆகும். இது இலைகளின் சாறு உறிஞ்சுவதன் மூலம் மர வளர்ச்சி, தேங்காய் உற்பத்தியை பாதிக்கும் மற்றும் வைரஸ் நோய்களை பரப்பும். இதன் பாதிப்பு அறிகுறிகளாக இலைகளின் அடிப்பக்கத்தில் வெண் ஈக்கள் கூட்டமாக காணப்படுதல், இலைகள் மஞ்சளாக மாறுதல், ,உலர்தல், தென்னை மர

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளத்தைச் சேர்ந்த விவசாயியான திரு. ஆ. தேவராசா அவர்களின் வயலில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழாவானது 11.04.2025 அன்று வவுனியா மாவட்டச் செயலாளர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர், அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். பரசூட் முறையிலான நெற் செய்கையில் விவசாயிகள் அதிக விளைச்சலைப்

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழா நிகழ்வு Read More »

முன்மாதிரித்துண்ட மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிருஸ்ணபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வானது 11.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் க.செல்வரத்தினம் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.P.ஷிவனியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி, பீடைகளைக்கட்டுப்படுத்திய களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.S.விஜயதாசன் அவர்கள்

முன்மாதிரித்துண்ட மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

முன்மாதிரித்துண்ட பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள குமரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் MIMB-07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 08.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் மு.வேலாயுதபிள்ளை என்பவரின் களத்தில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.ஆ.அனோயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் MIMB -07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கையினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்

முன்மாதிரித்துண்ட பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல்

விவசாயத் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முலம் உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் (PSDG) கீழ் இஞ்சி செய்கையினை விரிவுபடுத்தும் நோக்குடன் கடந்த 04.04.2025 ஆம் திகதியன்று இஞ்சி விதை கிழங்கு விநியோகம் வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவுசெய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு, பயனாளி ஒருவருக்கு 10 கிலோ வீதம் இலவசமாக விதை கிழங்குகள் வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடனும்

விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல் Read More »

பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

கடந்த வருடம் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 5 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு பெரிய வெங்காய விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கென மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பயனாளிகளுக்கு வசந்த கால நிலைப்படுத்தப்பட்ட தாய்க் குமிழ்கள் 100 கிலோ கிராம், ஆதார வலை மற்றும் பொலித்தீன் என்பன மானிய அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் பிரதி

பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா Read More »

பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் இரணைஇலுப்பைகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூசாரியார்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழாவானது 27.03.2025 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன், மடு பிரதேச செயலாளர் திரு.கே.பீட் நிஜாஹரன் அவர்களும் மற்றும் வெங்காய இனவிருத்தியாளர், உதவி விவசாய பணிப்பாளர் ஹெட்டியாராய்ச்சி, கமத் தொழில்

பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழா Read More »

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது

‘அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள்,சமத்துவம்.வலுப்படுத்துகை.’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2025.03.07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்தியத்

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது Read More »

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு – 2025

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு கமத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 15.03.2025 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 08.05 மணி வரையான காலப்பகுதியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எல்லோரும் இக் கணக்கெடுப்பிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேற்குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் வீட்டுத் தோட்டத்திலும் மற்றும் பயிர்ச் செய்கை நிலத்தில் அவதானித்த வனவிலங்குகளின் விபரத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தினை பயன்படுத்தி அறிக்கையிட்டு அப் படிவத்தினை

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு – 2025 Read More »