Mathuranthaki

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு அல்லது இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் கருத்திட்டமானது கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக முதற்கட்டமாக மன்னார் – 20, யாழ்ப்பாணம் – 26, கிளிநொச்சி – 22, வவுனியா -14, முல்லைத்தீவு – 17 […]

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல் Read More »

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அபயத்திற்கு அறிவிப்பதன் ஊடாக ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், சிறுவர், இளையோர் மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை அரச பொறிமுறையின் ஊடாக அபயம் குறைகேள் வலையமைப்பினால்

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு Read More »

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் ( 25,000) சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் கௌரவ ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த இருபத்தையாயிரம்( 25,000) வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் ம ற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத எனினும், தகுதியுள்ள பயனாளிகள் இருப்பின் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கு

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது. Read More »

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு Read More »

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி

கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தப்படும் மேற்படி போட்டிக்கான மாகாண மட்டப் போட்டி வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் வடமாகணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைப்பணிவேலைகளில் ஈடுபடும் கைப்பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட 1105 கைப்பணி ஆக்கங்கள் போட்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டு தேசிய அருங்கலைகள் பேரவையின் நடுவர் குழுவினால் 313 ஆக்கங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இதில்

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி Read More »

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடமாகாணம் தழுவி நடத்தப்படும் ,பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடான அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தும் BRIDGE  செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான  அறிமுக நிகழ்வு 15/11/2023 புதன்கிழமை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கிறிசலிஸ் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன் கிறிசலிஸ் பற்றிய சுருக்கமும் அதன் முக்கிய பணிகள் பற்றிய

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 16 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மாந்தை மேற்கு விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வி.காயத்திரி முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.ப.ஒலிவர் ஒஸ்ரின் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.தில்லையம்பலம் திவாகரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.இரத்தினசபாபதி கௌசிகன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை Read More »