Mathuranthaki

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (05.12.2024) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு […]

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரிடமும் எங்களை விஞ்சிய ஏதாவது திறமை இருக்கின்றது. அது பாராட்டப்படவேண்டியதுடன் இன்னமும் ஊக்குவிக்கப்படவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட அன்பாகப் பழகக் கூடியவர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று புதன்கிழமை (04.12.2024) ஊரெழு என்.கே. மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய இளையோர் கஷடப்பட்டு வேலை செய்வதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இலகுவாக உழைக்கலாம்

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் Read More »

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார்.

திருமறைக்கலாமன்ற தினமும், வைரவிழா ஆண்டின் ஆரம்பமும் கலைத்தூது கலையகத்தில்  செவ்வாய்க்கிழமை மாலை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில், திருமறைக்கலாமன்றத்தின் நிகழ்வுகளை நான் தவறவிடுவதில்லை. திருமறைக்கலாமன்றத்தின் எந்தவொரு நிகழ்வும் தரமானதாகவும் அதன் தனித்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கும். திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் மறைந்த அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும்தான், இந்த நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணம். மரியசேவியர் அடிகளார் அவர்களின் நல்ல எண்ணமும், சிந்தனையும்தான் இந்த நிறுவனத்தை இன்று விரிவாக்கி

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

இச் சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்  புதன் கிழமை  காலை  (04.12.2024) இடம்பெற்றது. கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும், ஆளுநருக்கு நன்றி கூறினார். மாவட்டச் செயலராக கடந்த காலங்களில் நான் பணியாற்றியபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 05.12.2024    

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »

பலாலி அம்மன் ஆலயத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வழிபாடு

பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்  புதன் கிழமை (04.12.2024) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களும் பங்கேற்றனர். இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும்

பலாலி அம்மன் ஆலயத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வழிபாடு Read More »

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் இடம்பெற்றது

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர். தலைமை உரையாற்றிய பிரதேச செயலர் சா.சுதர்சன், வடக்கு மாகாண ஆளுநரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கையில் மூன்றாம் மொழியாக சைகை மொழியை அரசாங்க அலுவலர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் இடம்பெற்றது Read More »

மரியாதை நிமித்தமான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை (04.12.2024) புறப்படும் நிலையில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு Read More »

பலாலி விமான நிலையம் தொடர்பாக அறிவிக்கவேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பலாலி விமான நிலையம் தொடர்பாக அறிவிக்கவேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் Read More »