Mathuranthaki

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா 01.01.2025 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு N.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம செயலாளர் திரு.L.இளங்கோவன், துணைவேந்தர், பேராசிரியர் S.சிறிசற்குணராஜா, கலை, விஞ்ஞானம், இந்து நாகரிக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர் ரகுராமன், பேராசிரியர் ரவிராஜன் பேராசிரியர் பத்மநாதன் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் சார்பில் தொழில்நுட்ப கற்கைகள் […]

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா Read More »

வடக்கு மாகாண ஒளி விழா– 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வட மாகாண ஒளி விழாவானது 2024.12.27 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு வண்ணாங்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லா.நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் முதன்மை விருந்தினர்களாக வடக்கு  மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்

வடக்கு மாகாண ஒளி விழா– 2024 Read More »

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக திரு. J. தற்பரன் (Attorney-at-Law, சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதி அமைச்சு) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு Read More »

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறையானது திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் RAHAMA நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக வைத்தியக்கலாநிதி எஸ். சிவதாஸ் (உளநல வைத்திய நிபுணர், போதனாவைத்திசாலை, யாழ்ப்பாணம்) அவர்கள்

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை Read More »

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு

டான் தொலைக்காட்சி குழுமத்தால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று திங்கட்கிழமை மாலை (23.12.2024) கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மின்விளக்குகளை ஒளிரச் செய்து அதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களும் பங்கேற்றார்.

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு Read More »

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (23.12.2024) சந்தித்துக் கலந்துரையாடினர். வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுவதாகவும் செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் முறையிட்டனர். வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும்

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் இன்று திங்கட் கிழமை  (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்;டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்தார். யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 18.12.2024

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் ‘கலைத்தவசி’ கலைஞர் (குழந்தை) செ.செபஸ்தியான் அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024 Read More »

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 19.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக எமது பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Varod இயக்குனர், வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி அதிபர் மற்றும் வவுனியா நகரசபை

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது Read More »