Mathuranthaki

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறையானது திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் RAHAMA நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக வைத்தியக்கலாநிதி எஸ். சிவதாஸ் (உளநல வைத்திய நிபுணர், போதனாவைத்திசாலை, யாழ்ப்பாணம்) அவர்கள் […]

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை Read More »

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு

டான் தொலைக்காட்சி குழுமத்தால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று திங்கட்கிழமை மாலை (23.12.2024) கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மின்விளக்குகளை ஒளிரச் செய்து அதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களும் பங்கேற்றார்.

மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு Read More »

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (23.12.2024) சந்தித்துக் கலந்துரையாடினர். வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுவதாகவும் செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் முறையிட்டனர். வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும்

வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் இன்று திங்கட் கிழமை  (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்;டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்தார். யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 18.12.2024

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் ‘கலைத்தவசி’ கலைஞர் (குழந்தை) செ.செபஸ்தியான் அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024 Read More »

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 19.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக எமது பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Varod இயக்குனர், வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி அதிபர் மற்றும் வவுனியா நகரசபை

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது Read More »

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தின விழாவானது 06.12.2024ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு சு.சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர். மாற்றுவலுவுடையோர் தின விழாவானது மாற்றுவலுவுடைய உற்பத்தியாளர்களின் கண்காட்சி மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது Read More »

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (05.12.2024) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரிடமும் எங்களை விஞ்சிய ஏதாவது திறமை இருக்கின்றது. அது பாராட்டப்படவேண்டியதுடன் இன்னமும் ஊக்குவிக்கப்படவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட அன்பாகப் பழகக் கூடியவர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று புதன்கிழமை (04.12.2024) ஊரெழு என்.கே. மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய இளையோர் கஷடப்பட்டு வேலை செய்வதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இலகுவாக உழைக்கலாம்

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »