Mathuranthaki

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு (16/06/2024) நடைபெற்றது. இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் […]

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் (16/06/2024) நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மடு தேவாலயத்திற்கு

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்  ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.    

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது Read More »

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் இந்திய துணைத்தூதரகமும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் மகளிர் விவகார சமூகசேவைகள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலகம், மாகாண சமூகசேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் ஜெய்பூரிலுள்ள பகவான் மகாவீர் விக்லாங் சஹாயட்ட சமித்தியினுடைய தொழில்நுட்ப உதவியுடன் இம் மாகாணத்தில் இரண்டாவது தடவையாக செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் ஒன்று இம்மாதம் 04.06.2024 -20.06.2024 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட திறன்

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 2024.05.31 ஆம் மற்றும் 01.06.2024 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். ஆண்களுக்கான போட்டி 31.05.2024 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் யாழ்ப்பாண

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 02.06.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டிகள் அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் அரம்பமாகி மாலை 8.30 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு விளையாட்டுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துக் கல்லூரி அதிபர் அவர்களால்

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் Read More »

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி வடக்கு மாகாண சபையின் வீதி பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘வீதி போக்குவரத்து நடைமுறைகளை கடைப்பிடித்து பெறுமதி மிக்க உயிர்களைக் காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இன்று 09/05/2024ம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக காங்கேசந்துறை வீதி சத்திரசந்தி வரை கவனயீர்ப்பு நடைபவனி இடம்பெற்றது. இந்நடைபவனியில் வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள்,

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது Read More »

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு,, வவுனியா, கிளிநெச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண வர்த்தகச் சந்தை – 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024 Read More »

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு அரங்கில் 28/04/2024 அன்று  பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மன அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பதையும் கடந்து, சந்தோசம், உடல் ஆரோக்கியம்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் புதிதாக கட்டப்பட்ட சித்தமத்திய மருந்தகத்தின்  பால்காய்ச்சும் ஆரம்ப நிகழ்வு மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் 10.04.2024 ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி ஆணையாளர் இகணக்காளர்இ திணைக்கள உத்தியோகத்தர்கள், உரியகாணியின் நன்கொடையாளர்,  செல்வச்சந்நிதி ஆலய சமயப்பெரியார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இபிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்புதிய கட்டடமானது பருத்தித்துறை பிரதேச செயலக மக்களிற்கு சுதேச மருத்துவத்துறையூடாக சுகாதார சேவைகளை

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு Read More »