Mathuranthaki

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக (PSDG) மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னார் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை-முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதம செயலாளர் செயலகம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 23.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டது. இந் நிதியீட்டத்தின் மூலம் மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னாருக்கு 190Mn ரூபா செலவிலும் மாவட்ட […]

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது Read More »

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக யாழ்மாவட்ட செயலகத்தால் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வடக்கு மாகாணசபை வளாகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 23.09.2025 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சமூக மருத்துவர் வைத்தியகலாநிதி நாகராசா பரமேஸ்வரன் அவர்களும் வைத்தியகலாநிதி துவாரகா சுதன்

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது Read More »

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக மாகாண சபைகளில் பயிற்சி பெறுவதற்கான அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.09.2025 அன்று நடைபெற்றது. செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி திட்டத்தில் வடக்கு மாகாண சபையில் உள்ள பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம் Read More »

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025 Read More »

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 19 யூலை 2025 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கல்மடு மூலிகை கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது மூலிகைக் கிராமத்தின் தற்போதைய நிலைமை பற்றி கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அத்தியட்சகர், மருத்துவப் பொறுப்பதிகாரி மற்றும் பணியாளர்கள் ஆகியோரை சந்தித்துக் கேட்டறிந்து கொண்டதுடன் அதன் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார் Read More »

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தகத்திற்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 2025 யூலை 11ம் திகதி அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்தவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி. சர்வானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டடத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா Read More »

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின்; ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025.07.17 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வ-பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை குழுமத்தால் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025 Read More »

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை

                         இங்கே பார்வையிடவும்          

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை Read More »

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும்

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு Read More »

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே. ரஜீவன் மற்றும் கண்டவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தகரன் ஆகியோர் கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு 03 ஜூலை 2025 அன்று விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின போது வைத்தியசாலையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள், மாகாண மூலிகை கிராமத்தின் வருமானம் பெறும் முறைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஆகியவை பற்றி கேட்டறிந்ததுடன் மூலிகைச் சிகிச்சை சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார் Read More »