யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம்
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இன்று (10.10.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையை உருவாக்குவதற்கான ஆவணத்தில் அதன் உறுப்பினர்கள் கடந்த செப்ரெம்பர் மாதம் 18ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தனர். அதற்கமைவாக, சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்பு […]
