June 25, 2026

உலக வங்கியின் நிதியுதவியுடன் குருநகர் இறங்குதுறை, யாழ். கோட்டை ஆகிய இடங்களை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (24.06.2026) மாலை நடைபெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘றிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) […]

உலக வங்கியின் நிதியுதவியுடன் குருநகர் இறங்குதுறை, யாழ். கோட்டை ஆகிய இடங்களை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read More »

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார்.

மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கும் அமைப்புகளாலேயே ஒரு சமூகத்தை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கூட்டுறவுத்துறையே அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். ஏழாலை மேற்கின் மைந்தனும் கூட்டுறவாளனுமான அமரர் கந்தையா மகாதேவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் (24.06.2026) ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதற்கமைவாக, வடக்கு மாகாணத்துக்குரிய புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு எவ்வாறு

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »