April 2026

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில், […]

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. Read More »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நேற்று வெளியான 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று (01.04.2026) கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு நேரடியாகப் பயணம் செய்த கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோரைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ.நிமல்ராஜ் வரவேற்றார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். Read More »

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் (Autism) மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் (Neurodevelopmental Disorders) உள்ள குழந்தைகளுக்கான ‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »