மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குளப் புனரமைப்புப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுவதற்கு ஏதுவாக பொது மக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29.04.2026) புதன்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. […]
