February 2026

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார்

மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். மல்லாவி ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கண்டறிவதற்காக, இன்று புதன்கிழமை (18.02.2026) மாலை ஆளுநர் அங்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையில் இயங்கிவரும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு […]

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நேரடி களப் பயணத்தை மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். இதன்போது மக்களின் கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக் கூடியவற்றை விரைந்து செயற்படுத்துவதற்கும், ஏனையவற்றை உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும், முல்லைத்தீவு மாவட்டச்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் களவிஜயம்

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில், புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களைப் பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை நேரடி களப்

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் களவிஜயம் Read More »

அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களு க்கு தனியானதொரு இடமாற்றக் கொள்கையினை உருவாக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை

அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களு க்கு தனியானதொரு இடமாற்றக் கொள்கையினை உருவாக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். Read More »

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2025 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட கு.விநாயகமூர்த்தி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பொறிக்கடவை அம்மன் கோவிலடி, குஞ்சுப்பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள வயற்துண்டத்தில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளினாலான வயல் விழா 09.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா Read More »

சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விதிமீறல்களில் ஈடுபட்டால், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். – வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தெரிவித்தார்

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை

சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விதிமீறல்களில் ஈடுபட்டால், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். – வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தெரிவித்தார் Read More »

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.

தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை. Read More »

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர், கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசாங்கத்தால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் (Olivier Praz) தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர், கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka – Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (16.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விருது வழங்கல் நிகழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இவ்விருது வழங்கல் நிகழ்வானது வடக்கு மற்றும்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகவுள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி Read More »