February 2026

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் 78ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சுதந்திரம் என்பது வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு சம்பிரதாய நிகழ்வு மட்டுமல்ல, அது எமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புமாகும். இனம், மதம், மொழி என்ற வேற்றுமைகளைக் கடந்து, ஒற்றுமை, சமாதானம் மற்றும் செழிப்பில் வேரூன்றியதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை நாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். […]

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் 78ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி. Read More »

காணி விடுவிப்பு மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவிப்பது குறித்து ஆராய்வு; – யாழ். கட்டளைத் தளபதியுடனான சந்திப்பில் ஆளுநர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும்,

காணி விடுவிப்பு மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவிப்பது குறித்து ஆராய்வு; – யாழ். கட்டளைத் தளபதியுடனான சந்திப்பில் ஆளுநர். Read More »

இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை (02.02.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர், வடக்கு மாகாண அதிகார எல்லைக்குள் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளைச் சாதகமாகப் பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேவேளை, வடக்கு மாகாண அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதும், தேசிய ரீதியாகக் கொள்கை அளவில்

இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா

கடந்த 28.01.2026 அன்று PSDG 2025 திட்டத்தின் கீழான பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழான நெற்ச்செய்கைக்கான வயல்விழா நிகழ்வானது புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசங்குளம் கிராமத்தில் தொழில்நுட்ப உதவியாளர் க.துருபதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் அத்தாட்சிபடுத்தல் சேவையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி விவசாயப்

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா Read More »

7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்துக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும்

7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது Read More »