December 2025

“பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விட மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைத் துரிதமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது போலவே, எதிர்வரும் ஆண்டில் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், முன்னைய நிலையை விடவும் மிகச் சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு அவர்களை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (17.12.2025) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

“பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விட மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள். Read More »

கலைக்கு இன, மத, மொழி வேலிகள் கிடையாது” – வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

கலைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை. அண்மையில் எமக்கு ஏற்பட்ட பேரிடரின்போது எவ்வாறு இனம், மதம் பாராது மனிதத்தை மட்டும் முன்னிறுத்தி அனைவரும் உதவினார்களோ, அதேபோன்று கலைகளும் மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமைகின்றன, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு

கலைக்கு இன, மத, மொழி வேலிகள் கிடையாது” – வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (16.12.2025) செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 284 பாடசாலை

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் பால்நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் நலிவுற்ற கர்ப்பிணிகளுக்கு உடனடி அவசரப் பொதிகள் தேவையான நேரத்தில் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் எதிர்வரும் காலப்பகுதிக்கு மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கைக்கமைவாக கொள்வனவு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்ட பொதிகள் அமைச்சின்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு Read More »

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்களிடமிருந்து பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து, ‘வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை’ உருவாக்குவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, பதிவு செய்யப்பட்ட

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை Read More »

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை (20.12.2025) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்தாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார். இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்து, நாளை வரை (16.12.2025) பரீட்சைக்கான அனுமதி அட்டை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை Read More »

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா– 2025

‘சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கிய சமூகங்களை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா 12.12.2025ஆம் திகதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்ஷhந்தன் தலைமையில் ஆரம்பமாகியது. சிறப்பு விருந்தினர்களாக பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.முத்துலிங்கம் நந்தகோபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர்

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா– 2025 Read More »

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர்

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும், அது விட்டுச்சென்ற சுவடுகளைப் பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் இன்று (12.12.2025) வெள்ளிக்கிழமை மாலை, கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்று,

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர் Read More »

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டும் போதாது. அவர்கள் தங்கள் முன்னைய நிலையை விடப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேலோங்கி வர வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12.12.2025) நடைபெற்ற உலக மண்

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »