பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (16.12.2025) செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 284 பாடசாலை […]
